
மாஸ்கோ: ஆக. 10-
ரஷ்ய செய்தி நிறுவனமான ‘டாஸ்’-க்கு ரஷ்ய துணைப் பிரதமர் மாரத் குஸ்னுலின் கூறியிருப்பதாவது: ஹார்முஸ் மற்றும் பாஸ்பரஸ் ஜலசந்திப் பகுதிகளில் அதிகரித்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ள மாற்றுப் போக்குவரத்து வழித்தடங்கள் அவசியமாகின்றன. இதற்காகத் துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியப் பெருங்கடலை அடையும் வகையில் ரயில் பாதையை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்தியாவுக்கு நேரடியாகப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் எந்தவொரு திட்டமும் ஏற்கத்தக்கதே. இத்திட்டம் சாத்தியமானால், ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலப்பரப்பு வழியாகவே நேரடியாக சரக்கு ரயில் போக்குவரத்து வசதி உருவாகும். ரஷ்யாவின் கட்டுமானத் துறை ஆண்டுக்கு மேலும் ஒரு டிரில்லியன் ரூபிள் நிதியைக் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்தகைய தொடர் நிதி ஆதரவு கிடைத்தால் கட்டுமானத் திறனை மேலும் விரிவுபடுத்த முடியும்.














