Home செய்திகள் தேசிய செய்திகள் ராகுல் குற்றச்சாட்டு

ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அக். 6-
சிறப்பு தீவிரத் திருத்தப் (எஸ்.ஐ.ஆர்.) பணிக்காகப் பயன்படுத்தப்படும் விண்ணப்பப் படிவம் 6-ஐ, பாஜகவுக்கு உதவும் நோக்கில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாற்றியுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிஜேபி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
“எஸ்.ஐ.ஆர். பணியில் படிவம் 6-ஐ தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டவிரோதமாகவும், ஒருதலைப்பட்சமாகவும் மாற்றியுள்ளார். அவர் படிவம் 6-ஐ மாற்றியிருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகியுள்ளது.
பாஜகவுக்கு உதவுவதற்காகவே ஞானேஷ் குமார் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார். ஜனநாயக விரோதமான இந்த நடவடிக்கைக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் எங்களது போராட்டம் தொடரும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.