Home செய்திகள் தேசிய செய்திகள் ரூ.19,000 கோடியில் கடற்படைக்கு புதிய ஆதரவுக் கப்பல்கள்

ரூ.19,000 கோடியில் கடற்படைக்கு புதிய ஆதரவுக் கப்பல்கள்

விசாகப்பட்டினம், அக். 7-
இந்தியக் கடற்படையின் திறனை அதிகரிக்கும் வகையில் ரூ.19,000 கோடி மதிப்பில் 5 புதிய ‘ஃப்ளீட் சப்போர்ட்’ ரக ஆதரவுக் கப்பல்களைத் தயாரிக்கும் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கி வைத்தார். இந்தியக் கடற்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த 5 ஆதரவுக் கப்பல்களில் முதலாவது கப்பலான ‘சூர்யா’ செவ்வாய்க்கிழமை முறைப்படி கடலில் இறக்கி வைக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஷிப்யார்டு தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு கப்பல் சேவையைத் தொடங்கி வைத்தார். கடற்படைத் தலைவர் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.