Home செய்திகள் தேசிய செய்திகள் விமான எரிபொருளின் விலை உயர்வை சமாளிக்க ரூ.10,000 கோடியில் நடவடிக்கை

விமான எரிபொருளின் விலை உயர்வை சமாளிக்க ரூ.10,000 கோடியில் நடவடிக்கை

புதுடெல்லி, ஜூன் 4- வி​மான எரிபொருளின் திடீர் விலை உயர்வை சமாளிக்க விமானப் போக்​கு​வரத்​துத் துறைக்கு ரூ.10,000 கோடியில் ஒரு நிதி​யத்தை உரு​வாக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்​திய கிழக்கு நாடு​களில் நில​வும் போர் பதற்​றம் காரண​மாக, கச்சா எண்​ணெய் விலை உயர்ந்து எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்​வால் விமானப் போக்குவரத்து நிறு​வனங்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளன. இதையடுத்​து, போர் முடி​யும் வரை உள்​ளூர் விமானங்​களுக்​கான எரிபொருள் (ஏடிஎப்) விலை உயர்வை நிறுத்தி வைக்க வேண்​டும் என இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் மற்​றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்​பரேஷன் உள்​ளிட்ட எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிறுவனங்களுக்கு இந்​திய விமான நிறு​வனங்​கள் கோரிக்கை வைத்​திருந்​தன. இந்​நிலை​யில், விமான எரிபொருளின் திடீர் விலை உயர்வை சமாளிக்க, விமானப் போக்​கு​வரத்​துத் துறைக்கு ரூ.10,000 கோடி​யில் ஒரு நிதி​யத்தை உரு​வாக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்​திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. தேவை குறைவு காரண​மாக மார்ச் மற்​றும் ஏப்​ரல் மாதங்​களில் விமான நிறு​வனங்​கள் தங்​களது விமான சேவை​களைக் குறைக்க வேண்​டிய கட்​டா​யத்​துக்​குத் தள்​ளப்​பட்​டன. குறை​வான பயணத் தேவை மற்​றும் அதிக எரிபொருள் விலை​யால் ஏற்​பட்ட செயல்​பாட்​டுச் செல​வு​கள் உள்​ளிட்ட பல காரணங்​களால், மார்ச் மாதத்​துடன் ஒப்​பிடும்​போது ஏப்​ரலில் உள்​நாட்டு விமானப் போக்​கு​வரத்து 4.2% குறைந்​து, சுமார் 1.38 கோடி​யாகப் பதி​வாகி​யுள்​ளது. கடந்த மாதம், உள்​நாட்டு விமான நிறு​வனங்​களுக்​கான எரிபொருள் விலை கிலோ லிட்​டருக்கு ரூ.8,289.04 (அல்​லது 8.56%) உயர்த்​தப்​பட்​டு, ரூ.96,638.14-லிருந்து ரூ.1,04,927.18 ஆக அதி​கரித்​தது.