
சென்னை: மே 8-
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளை வென்று ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க இதர கட்சிகளின் ஆதரவை கோரிய நிலையில், அதிமுகவில் இருந்து ஆதரவு எம்எல்ஏக்களுடன் சி.வி.சண்முகம் தவெகவுக்கு ஆதரவளிக்கப்போவதாக பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், மயிலம் தொகுதியில் வென்றதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.இதையடுத்து நேற்று மாலை டெல்லி சென்ற சி.வி.சண்முகம், குடியரசுத்துணைத்தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதையடுத்து, தற்போது மாநிலங்களவை இடம் ஒன்று தமிழகத்தில் காலியாகியுள்ளது.


















