Home மாவட்டங்கள் பெங்களூர் தமிழகத்தில் கனமழை

தமிழகத்தில் கனமழை

சென்னை: மே 19-
தமிழகத்​தில் நீல​கிரி, கோயம்​புத்​தூர், தேனி, ஈரோடு, திண்​டுக்​கல் ஆகிய 5 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இன்​றும் நாளை​யும் (மே 20, 21) இடி​யுடன் கூடிய கனமழை பெய்​யக்கூடும்.
இதுகுறித்​து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வளிமண்டல காற்​றழுத்த தாழ்​வுப் பாதை காரண​மாக, இன்​றும் நாளை​யும் நீல​கிரி, கோயம்​புத்​தூர், தேனி, ஈரோடு, திண்​டுக்​கல் ஆகிய 5 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக்​கூடும்.
இன்​று​முதல் மே 23-ம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் வட உள்​தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் இடி​யுடன் கூடிய மித​மான மழை பெய்​யக்​கூடும். ஏனைய தமிழகத்​தி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான பெய்​யக்​கூடும்.
மே 23-ம் தேதி வரை, தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்ச வெப்​பநிலை​யில் குறிப்​பிடத்​தக்க மாற்​றத்​துக்​கான வாய்ப்பு குறைவு. எனினும், வட கடலோர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் வெப்​பநிலை சற்று உயரக்கூடும். சென்னை, புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி​யுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.