Home விளையாட்டு ஐபிஎல் பிளே ஆஃப் சுற்​றில் எஞ்சியுள்ள ஓரிடத்​துக்கு மோதும் 5 அணி​கள்

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்​றில் எஞ்சியுள்ள ஓரிடத்​துக்கு மோதும் 5 அணி​கள்

புதுடெல்லி, மே 20- நடப்பு ஐபிஎல் கிரிக்​கெட் சீசனில் பிளே ஆஃப் சுற்றில் காலி​யாக உள்ள ஓரிடத்​துக்கு 5 அணி​கள் மோதுகின்​றன. கடந்த ஆண்​டு​களைக் காட்​டிலும் நடப்பு ஐபிஎல் சீசன் மிக​வும் விறு​விறுப்​பாக நடை​பெற்று வரு​கிறது. இந்த சீசனில் மும்பை இந்தி​யன்​ஸ், லக்னோ சூப்​பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை ஏற்​கெ​னவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளி​யேறி​விட்​டன. அதே​நேரத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்களூரு (18 புள்​ளி​கள்) அணி, முதல் அணி​யாக பிளே ஆஃப் சுற்​றுக்கு தகுதி பெற்​றது. நேற்று முன்​தினம் சென்​னை​யில் நடைபெற்ற லீக் ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி சென்னை சூப்​பர் கிங்​ஸ்​ (சிஎஸ்​கே) அணியை வீழ்த்​தி​ய​தால் 16 புள்​ளி​களைப் பெற்று பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறி​விட்​டது. அது​மட்​டுமல்​லாமல் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யும் 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்​றுக்கு தகுதி பெற்​று​விட்​டது. தற்​போது பிளே ஆஃப் சுற்​றில் எஞ்​சிய ஓர் இடத்​துக்கு 5 முக்​கிய அணி​கள் மல்​லுக்​கட்​டு​கின்​றன. இது​வரை 63 ஆட்​டங்​கள் ​(நேற்று நடை​பெற்ற ராஜஸ்​தான்​-லக்னோ ஆட்​டத்தை சேர்க்​காமல்) முடிந்துள்​ளன. தற்​போது பஞ்​சாப் கிங்ஸ் அணி 13 புள்​ளி​களு​டன் உள்​ளது. அந்த அணி கடைசி லீக் ஆட்​டத்​தில் லக்​னோவை வரும் 23-ம் தேதி சந்​திக்க உள்​ளது. இந்த ஆட்​டத்​தில் பஞ்​சாப் அணி வெற்றி பெற்​றால் 15 புள்​ளி​களை பெற்​று​விடும். அதே​நேரத்​தில் மற்ற அணி​களின் வெற்​றி, தோல்​வியைப் பொறுத்தே பஞ்​சாப் அணி, பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறுமா என்​பது தெரி​யும்.அதே​போல் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் 2 ஆட்​டங்​கள் மீத​முள்​ளன. 12 புள்​ளி​களு​டன் இருக்​கும் அந்த அணி லக்னோ அணி​யை​யும், வரும் 24-ம் தேதி மும்பை இந்தி​யன்ஸ் அணி​யை​யும் எதிர்​கொள்​கிறது. இந்த இரண்டு போட்டிகளி​லும் ராஜஸ்​தான் வெற்றி பெற்​றால் 16 புள்​ளியை எட்டி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்​யும். ஒரு வேளை ஒரு போட்​டி​யில் மட்​டும் தோல்வி கண்​டால், மற்ற அணி​களின் வெற்றி, தோல்விக்​காக அந்த அணி காத்​திருக்க நேரிடும். 12 புள்​ளி​களு​டன் இருக்​கும் சென்னை சூப்​பர் கிங்​ஸ்​(சிஎஸ்​கே) தனது கடைசி ஆட்​டத்​தில் குஜ​ராத் அணி​யுடன் மோதுகிறது. இதில் சிஎஸ்கே கண்​டிப்​பாக வெற்றி பெற வேண்​டும். அப்​படி வெற்றி பெற்​றால் சிஎஸ்கே அணி 14 புள்​ளி​களைப் பெற்று மற்ற அணிகளின் வெற்​றி, தோல்விக்​காக காத்​திருக்க வேண்​டிய நிலை ஏற்​படும்.