Home செய்திகள் தேசிய செய்திகள் சபரிமலை தங்கம் மாயமான வழக்கு: தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் கைது

சபரிமலை தங்கம் மாயமான வழக்கு: தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் கைது

திரு​வனந்​த​புரம், ஜூலை 24- சபரிமலை கோயி​லில் தங்​கம் காணா​மல் போன வழக்கு தொடர்​பாக திரு​வி​தாங்​கூர் தேவஸ்​வம் போர்​டின் முன்​னாள் தலை​வர் பி.எஸ்​.பிர​சாந்த் நேற்று கைது செய்​யப்​பட்​டார். கடந்த 2019-ல் சபரிமலை கோ​யில் கரு​வறை கதவு நிலைகள் மற்​றும் துவார பால​கர் சிலைகளுக்கு மின்​முலாம் பூசுவதற்​காகத் தங்​கத்​தைக் கொண்டு சென்​ற​போது தங்​கம் திருடப்​பட்​ட​தாக கூறி சிறப்பு புல​னாய்​வுக் குழு விசா​ரணை​யைத் தொடங்​கியது. 2025-ல் தேவஸ்​வம் போர்டு தலை​வ​ராக பிர​சாந்த் இருந்​தார். அப்​போது, 2019-ல் நடந்த தங்​கம் திருட்டை மறைப்​ப​தற்​காக பழுது இல்​லாத துவார பால​கர் சிலைகளில் பழுது இருப்​ப​தாகக் கூறி மீண்​டும் அனுப்பி வைத்​த​தாகச் சிறப்பு புல​னாய்​வுக் குழு கேரள உயர் நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளது. தேசிய உலோக​வியல் ஆய்​வகத்​தின் அறிக்கை மூலம், இந்த வழக்​கில் குற்​ற​வாளி​கள் தங்​கம் திருடிய முறை மற்​றும் சதித்​திட்​டம் குறித்த தெளி​வான அறி​வியல் பூர்வ ஆதா​ரங்​கள் கிடைத்​துள்​ள​தாக நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதன் தொடர்ச்​சி​யாக, நேற்று திரு​வனந்​த​புரத்​தில் உள்ள இல்​லத்​தில் வைத்து பிர​சாந்தை சிறப்பு புல​னாய்​வுக் குழு கைது செய்​தது. இதே வழக்கு தொடர்​பாக தேவஸ்​வம் போர்​டின் முன்​னாள் உறுப்​பினர் அஜி குமார் மற்​றும் திரு​வாபரண ஆணை​யர் ஆர்​.ரெஜிலால் ஆகியோரிட​மும் சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். கைது செய்​யப்​படு​வதற்கு முன் முகநூலில் பதி​விட்ட பிர​சாந்த், தன் மீதான நடவடிக்கை முற்​றி​லும் அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டது என்​றும், 2019-ல் நடந்த தங்​கம் திருட்டை வெளிக்​கொண்டு வந்​ததே தங்​கள் நிர்​வாகம் தான் என்​றும்​ கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.