Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்காவில் வேலை செய்ய ரூ.96 லட்சம் கட்டணம்; இடியை இறக்கிய அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் வேலை செய்ய ரூ.96 லட்சம் கட்டணம்; இடியை இறக்கிய அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், ஜூலை 31- அமெரிக்காவில் படிப்பை முடித்தவர்கள், தொடர்ந்து அங்கேயே பணியாற்றுவதற்கு ரூ.96 லட்சம் கட்டணமாக விதிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். இது இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த பல்கலை போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள், உலகளவில் லட்சக்கணக்கான மாணவர்களை ஈர்த்து வருகின்றன. இந்த சூழலில், மாணவர் விசாக்கள் மீதான கடுமையான சோதனைகள் மற்றும் ஹெச்1பி வேலை விசாவுக்கான கட்டணம் உயர்வு உள்பட பல குடியேற்ற நடவடிக்கைகளை கடந்த ஆண்டில் டிரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இது அமெரிக்காவில் கல்வி பயிலவும், பணியாற்றவும் எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்காவில் படிப்பை முடித்தவர்கள், தொடர்ந்து அங்கேயே பணியாற்றுவதற்கு ரூ.96 லட்சம் கட்டணமாக விதிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். அதாவது, எப்1 விசா மூலம் அமெரிக்காவில் பயிலும் பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு, ஓராண்டு வரை தங்களது துறை சார்ந்த வேலைகளில் தங்கிப் பணியாற்றலாம். அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணிதம் படிப்புகளைப் படித்த மாணவர்கள், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை பணியாற்ற முடியும். தற்போது, அமெரிக்காவில் கல்வி பயின்று முடித்த மாணவர்களுக்கு பணி அனுபவம் பெற வசதியாக கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்திற்கு தான், அதிபர் டிரம்ப் கட்டணத்தை விதிக்க பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.இந்த முன்மொழிவு குறித்து உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்திற்குள் இன்னும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும், இக்கட்டணத்தை மாணவர்களே செலுத்த வேண்டுமா அல்லது அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா என்பதையும் அதிகாரிகள் இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும், இது ஒப்புதல் அளிக்கப்பட்டால், அமெரிக்காவில் வேலை தேடும் சர்வதேச மாணவர்களுக்கு விதிக்கப்படும் மிகப்பெரிய நிதித் தடையாக இது மாறும். அமெரிக்காவில் தற்போது 3.3 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். வெளிநாட்டு மாணவர் குழுக்களில் இந்தியர்களே மிகப்பெரிய அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.