Home செய்திகள் உலக செய்திகள் இந்திய எல்லையை கண்காணிக்க ட்ரோன் ஆராய்ச்சி மையம் அமைத்தது சீனா

இந்திய எல்லையை கண்காணிக்க ட்ரோன் ஆராய்ச்சி மையம் அமைத்தது சீனா

பெய்ஜிங்: ஜூலை 31-
எல்​லைக் கண்​காணிப்​பு, பாது​காப்​பு, தளவாடங்​கள் மற்​றும் போக்​கு​வரத்தை பலப்​படுத்​து​வதற்​காக, திபெத்​தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்​திற்கு அரு​கில் ட்ரோன் ஆராய்ச்சி மற்​றும் மேம்பாட்டு மையத்தை சீனா நிறு​வி​யுள்​ளது.
சீனா இந்​திய எல்​லைக்கு அரு​கில் உள்ள பகு​தி​களில் ராணுவ பலத்தை அதி​கரித்து வரு​கிறது. லடாக்​கின் லே பகு​திக்கு அரு​கில் உள்ள ஹேட்​டன் விமானப்​படை தளத்​தில் ஏழு ஜே-20 ரக போர் விமானங்​களை நிறுத்​தி​யுள்​ளது. அருணாச்​சலப் பிரதேசத்​தின் தவாங் பகு​திக்கு அரு​கில் 4 ஜே-20 ரக போர் விமானங்​களை நிறுத்தி​யுள்​ளது செயற்​கைக்​கோள் படங்​கள் மூலம் தெரியவந்தது. இவை ரேடாரில் சிக்​காத 5-ம் தலை​முறை போர் விமானங்​கள் ஆகும். இதற்கு போட்​டி​யாக இந்​திய விமானப்​படை ரபேல் மற்​றும் சுகோய் போர் விமானங்​களை நிறுத்​தி​யுள்​ளது.
இந்​நிலை​யில் 4,000 மீட்​டருக்கு அதி​க​மான உயரத்​தில் உள்ள சீனாவின் திபெத் பகு​தி​யில் அமைந்​துள்ள சிசாங் பல்கலைக்கழகத்​தில் ட்ரோன் ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு மையத்தை சீனா கடந்த 3-ம் தேதி திறந்​துள்​ளது. அமெரிக்க தொழில்​நுட்​பத்​துடன் போட்​டி​போடும் விதத்​தில் சீனா இந்த ட்ரோன் ஆராய்ச்சி மையத்தை தொடங்​கி​யுள்​ளது. இது குறித்து இந்​தப் பல்​கலைக்​கழகத்​தின் தலை​வர் சுன் சியான்​ஷாங் கூறிய​தாவது: செயற்கை நுண்​ணறிவு மற்​றும் புதிய ஆற்றல் அறி​வியல் மற்​றும் பொறி​யியல் ஆகிய​வற்​றில் புதிய பாடத்​திட்​டங்​களுக்​கான சமீபத்​திய ஒப்​புதலைத் தொடர்ந்​து, நாங்​கள் இப்​போது ‘பீடபூமி நுண்​ணறிவு குறைந்​த-உயர ட்ரோன் பயன்​பாடு​கள்’ என்ற பாடத்​திட்​டத்​தை​யும் முறைப்​படி பதிவு செய்துள்​ளோம். வருங்​காலத்​தில் இந்த மையம் அதிக உயர​மான ட்ரோன்களுக்கான முக்​கிய தொழில்​நுட்​பச் சவால்​களை இலக்காகக் கொண்டு செயல்​படும். சுற்​றுச்​சூழல் பாது​காப்​பு, எல்லைக் கண்​காணிப்​பு, பாது​காப்​பு, போக்​கு​வரத்​து, புவி​யியல் கண்​காணிப்பு மற்​றும் அவசரப் பொருட்​கள் விநி​யோகம் ஆகிய வற்​றிற்​கான ஒருங்​கிணைந்த தளங்​களை இந்​த மையம்​ உருவாக்கும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.