Home செய்திகள் உலக செய்திகள் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் பீரங்கிகள் குவிப்பு

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் பீரங்கிகள் குவிப்பு

இஸ்லாமாபாத்: ஆக. 4:
நம் நாட்டின் எல்லையில் பாகிஸ்தான் திடீரென்று சீனாவின் 250 ஹோவிட்சர் பீரங்கி வாகனத்தை நிலைநிறுத்தி உள்ளது. மத்திய உளவுத்துறை இதனை உறுதி செய்துள்ள நிலையில் மீண்டும் இருநாடுகள் இடையே மோதல் வெடிக்கிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடங்கியது. 2025ம் ஆண்டு மே மாதம் 7 ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை நம் நாடு பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளம், விமான தளங்கள் அழிக்கப்பட்டன.
பாகிஸ்தானும் நம்மை தாக்க முயன்று தோற்றுப்போனது. அதன்பிறகு சரண்டர் ஆனது. ‘எங்களை தாக்க வேண்டாம்.. விட்டு விடுங்கள். நாங்களும் இனி தாக்குதல் நடத்தமாட்டோம்’ என பாகிஸ்தான் கெஞ்சியதால் நம் நாடு ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தியது. இருப்பினும் தற்போது வரை பாகிஸ்தான் திருந்தவில்லை. அவ்வப்போது நம் நாட்டை சீண்டி வருகிறது. பாகிஸ்தான் அமைச்சர்கள், எம்பிக்கள் தொடர்ந்து நம் நாட்டுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. திடீரென்று பாகிஸ்தான் நம் நாட்டின் எல்லையின் அருகே அதிநவீன பீரங்கிகளை குவித்துள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட SH -15 Truck Mounted Self Propelled hositzers எனும் 250 பீரங்கிகளை பாகிஸ்தான் நம் நாட்டின் எல்லையில் குவித்துள்ளது. புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் இந்த ஹோவிட்சர் பீரங்கிகளை குஜ்ரன்வாலா, சியால்கோட், ஜலால்பூர் ஜாட்டன் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் நிலை நிறுத்தி உள்ளது. இதனை நம் நாட்டின் உளவுத்துறை கண்டுபிடித்து மத்திய அரசை அலர்ட் செய்துள்ளது. பாகிஸ்தான் நம் நாட்டின் கிழக்கு எல்லையில் வடக்கு முதல் தெற்கு பகுதிகள் வரை இந்த பீரங்கிகளை நிலை நிறுத்தி உள்ளது.
இது நம் நாட்டுக்கான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நம் நாட்டை குறிவைத்து தாக்க பாகிஸ்தான் தயாராகி வருகிறதா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. ஏனென்றால் இந்த ஹோவிட்சர் பீரங்கிகள் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. சீன அரசின் பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனமான NORINCO-வால் இது தயாரிக்கப்பட்டுள்ளது. 155மிமீ பீரங்கி அமைப்புகளைத் திட்டமிட்ட முறையில் நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது.