Home பக்தி திருச்செந்தூர் சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா

திருச்செந்தூர் சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா

திருச்செந்தூர்: செப்டம்பர் 1
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விச்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 3 மணிக்கு வெள்ளிப் பள்ளக்கில் கொடிப்பட்டம் 9 சந்தி வழியாக கொண்டு வரப்பட்டது.அதன்பின், கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடிமரத்தில் பஞ்சவாத்தியங்கள் முழங்க, அதிகாலை 5.20 மணிக்கு சிவாச்சாரியார் கொடி ஏற்றினார். அப்போது பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என முழங்கினர். தொடர்ந்து, கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. 6.35 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர் திருச்சிற்றம்பலம் தம்பிரான் சுவாமிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4.30 மணிக்கு அப்பர்சுவாமிகள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து உழவாரப்பணி செய்து கோயில் சேர்ந்தார். இரவு 7 மணிக்கு ஸ்ரீபலி நாயகர் அஸ்திரதேவருடன் தந்த பள்ளக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தார்.
ஆவணித் திருவிழா செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. 9-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.