
புதுதில்லி, செப்டம்பர்2-
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தவும், அந்நியச் செலாவணி கையிருப்பைமுறையாகப் பாதுகாக்கவும், அத்தியாவசியத் தேவையின்றி தங்கம் வாங்குவதைத்தவிர்க்குமாறு பொதுமக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறைமுக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். தற்போதைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில்,இந்தியாவின் நிதி ஸ்திரத்தன்மையைப் பேண இது மிகவும் அவசியமான ஒன்று என்பதைஅவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கத் தேவையில் சுமார் 99 சதவீதம் வெளிநாடுகளில்
இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில்மட்டும் சுமார் 6.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் வெளிநாடுகளிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தங்கம் வாங்குவதற்கு அமெரிக்க டாலர் மதிப்பில்பணம் செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் டாலர்
செலாவணி கட்டாயமாக இருப்பதால், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு
பெரும் அழுத்தம் ஏற்படுகிறது.இத்தகைய இறக்குமதிகள் அதிகரிப்பது, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை
உயர்த்துவதுடன், சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பையும் பலவீனமடையச்
செய்கிறது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமாகக் குறையும்போது, அது
ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியிலும் பின்னடைவை ஏற்படுத்தும் என நிபுணர்கள்
எச்சரிக்கின்றனர். இதனைத் தடுக்கும் நோக்கில், மக்கள் தேவையற்ற தங்க
முதலீடுகளைத் தவிர்த்து, அந்த நிதியை உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்வ கையில் முதலீடு செய்ய வேண்டும் என்பதே பிரதமரின் விருப்பமாகும்.தங்கத்துடன் சேர்த்து, தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களையும், வெளிநாடுகளில்நடைபெறும் ஆடம்பரத் திருமணங்களையும் தவிர்க்குமாறும் பிரதமர்
அறிவுறுத்தியுள்ளார். சுற்றுலா மற்றும் பிற தேவைகளுக்காக வெளிநாடு செல்வது,நாட்டின் அந்நியச் செலாவணியை வெளியேறச் செய்கிறது. இதற்குப் பதிலாக,
உள்நாட்டுப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதை (சுதேசி)
ஊக்குவிக்கவும், மின்சார வாகனங்களுக்கு மாறவும், பொதுப் போக்குவரத்தைப்
பயன்படுத்தவும் பிரதமர் பொதுமக்களுக்குப் பரிந்துரைத்துள்ளார். இந்தியாவின்100-வது சுதந்திர தினத்தை நோக்கிப் பயணிக்கும் வேளையில், வளமான மற்றும்வளர்ச்சியடைந்த இந்தியாவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க, மக்கள்அனைவரும் இந்த பொருளாதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஒத்துழைக்க வேண்டும்என பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார் உலகளாவியபொருளாதார நிச்சயமற்ற சூழலில், இந்தியா தனது பொருளாதார அடித்தளத்தை பலப்படுத்த
வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதைப் பிரதமர் தனது உரையின் மூலம்உணர்த்தியுள்ளார். மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, நாட்டின்
வளர்ச்சிக்குத் தங்களின் பங்களிப்பை நல்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்..













