Home மாவட்டங்கள் பெங்களூர் சப் ஜூனியர் பாரா தடகளத்தில் சாதனைசுரேந்திரன் 2 தங்கம், 1 வெள்ளி வெற்றி

சப் ஜூனியர் பாரா தடகளத்தில் சாதனைசுரேந்திரன் 2 தங்கம், 1 வெள்ளி வெற்றி

மதுரை: செப்டம்பர் 4
2026-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சப் ஜூனியர் பாரா தடகள போட்டி ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. இதில் சுரேந்திரன் சிறப்பாக பங்கேற்று குண்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கங்களை, 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.சுரேந்திரனை மாநில தடகள சங்க துணைத்தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சாக்கோட்டை க.அன்பழகன், பள்ளி தாளாளர் வெங்கடேஷ், தலைமையாசிரியை கனகவல்லி, ஆசிரியை தேவி ஆகியோர் பாராட்டினர்.
சுரேந்திரனுக்கு பயிற்சி அளித்த ஆசிரியைகள் தெரிவித்ததாவது, “சுரேந்திரன் கடந்த மாதம் தஞ்சாவூரில் நடந்த பாரா தடகள போட்டியில் வெற்றி பெற்று, இம்மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தேர்வானார்.
தொடர்ந்து, மதுரையில் நடந்த மாநில அளவிலான சப் ஜூனியர் பாரா தடகள போட்டிகளில் 2 தங்கம், 1 வெள்ளிப் பதக்கத்தை வென்று, தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளார்,” என்றனர்.
இந்த வெற்றி அவரது கடின உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.