
பெங்களூர், செப். 6-
பெங்களூரு தேவனஹள்ளி தாலுகா சிக்கசன்னே கேட் சிக்னல் அருகே அதிவேகமாக வந்த ‘சுவிப்ட்’ கார் மீது, ‘பி.எம்.டபிள்யூ. ஆர்.ஆர்.’ ரக சூப்பர் பைக் பலமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த கொடூர விபத்தில் காரில் இருந்த தேவநஹள்ளி தாலுகா நரகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் (வயது 25) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய பி.எம்.டபிள்யூ. பைக்கை ஓட்டி வந்த ராகேஷ் என்பவர், விபத்து நடந்தவுடனேயே பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவநஹள்ளி போக்குவரத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பைக் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.













