Home செய்திகள் தேசிய செய்திகள் காப்பியடித்து சிக்கிய ஐஐடி மாணவர் தற்கொலை

காப்பியடித்து சிக்கிய ஐஐடி மாணவர் தற்கொலை

மும்பை, செப். 19- மராட்டிய மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரும் ஐஐடி பாம்பே கல்வி நிறுவனத்தில், தேர்வில் காப்பியடித்து சிக்கிய மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி பாம்பே கல்வி நிறுவனத்தின் எனர்ஜி அண்ட் சைன்ஸ் துறையில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தவர் ஷகில் வாகுடே. இந்நிலையில், நேற்று முன்தினம் வகுப்பறையில் தேர்வு நடைபெற்றது.
அந்தத் தேர்வை எழுதிய ஷகில் வாகுடே, சாட் ஜிபிடியைப் பயன்படுத்தி காப்பியடித்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டுபிடித்த ஆசிரியர்கள், அவரைக் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ஷகில் வாகுடே, நேற்று மாலை பல்கலைக்கழக விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.