Home மாவட்டங்கள் சென்னை நகராட்சி அலுவலகங்களில் ரூ.1.73 கோடி பறிமுதல்

நகராட்சி அலுவலகங்களில் ரூ.1.73 கோடி பறிமுதல்

சென்னை, செப். 23:
தமிழகம் முழுவதும் 40 நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நேற்று நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.13,78,207 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ‘கூகுள் பே’ மூலம் ஊழியர்கள் ரூ.1.60 கோடி லஞ்சம் பெற்றது கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்புப் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மாவட்டம் வாரியாக பறிமுதல் செய்யப்பட்ட தொகை: சென்னை பெருங்குடியில் ரூ.4,260 ரொக்கம், ரூ.43,42,563 ஜி-பே; தண்டையார்பேட்டையில் ரூ.46,000; பல்லாவரத்தில் ரூ.4,820; மாதவரத்தில் ரூ.2,000 மற்றும் ரூ.1,85,550 ஜி-பே; ஆலந்தூரில் ரூ.27,000 மற்றும் ரூ.1,95,000 ஜி-பே பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூரில் ரூ.42,180 ரொக்கம், ரூ.8,52,500 ஜி-பே; காஞ்சிபுரம் குன்றத்தூரில் ரூ.80,650 ஜி-பே; வேலூர் காட்பாடியில் ரூ.2,300 மற்றும் ரூ.11,040; ராணிப்பேட்டை அரக்கோணத்தில் ரூ.7,64,500; செங்கல்பட்டு மறைமலைநகரில் ரூ.14,56,356; கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் ரூ.7,70,000 ஜி-பே தொகை சிக்கியது. கடலூர் பண்ருட்டியில் ரூ.4,600 மற்றும் ரூ.6,84,221; விழுப்புரத்தில் ரூ.80,650; திருவண்ணாமலை செய்யாறில் ரூ.1,90,000; திருப்பத்தூர் வாணியம்பாடியில் ரூ.41,000; திருச்சி அரியமங்கலத்தில் ரூ.15,100; அரியலூர் ஜெயங்கொண்டத்தில் ரூ.8,000; பெரம்பலூரில் ரூ.25,450; கரூர் குளித்தலையில் ரூ.51,000 மற்றும் ரூ.4,02,000; புதுக்கோட்டை அறந்தாங்கியில் ரூ.32,500; தஞ்சாவூர் பட்டுக்கோட்டையில் ரூ.32,000; திருவாரூர் கூத்தாநல்லூரில் ரூ.13,000 பறிமுதல் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் பஞ்சாயத்து அலுவலகத்தில் ரூ.8,200 மற்றும் ரூ.19,16,280; மயிலாடுதுறையில் ரூ.52,280; கோவை மேட்டுப்பாளையத்தில் ரூ.1,38,900 மற்றும் ரூ.4,68,999; ஈரோடு சத்தியமங்கலத்தில் ரூ.1,54,000; தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ.5,750 மற்றும் ரூ.3,13,000; திருப்பூர் அவிநாசியில் ரூ.5,53,767 மற்றும் ரூ.1,00,000 சிக்கின. மதுரையில் ரூ.1,35,000, விருதுநகர் சிவகாசியில் ரூ.10,500, தேனியில் ரூ.12,000, திருநெல்வேலியில் ரூ.9,300 மற்றும் ரூ.91,500, கன்னியாகுமரியில் ரூ.10,000, தென்காசி கடையத்தில் ரூ.16,000 மற்றும் ரூ.10,00,200, தூத்துக்குடி காயல்பட்டினத்தில் ரூ.7,500 மற்றும் ரூ.19,66,500, ராமநாதபுரத்தில் ரூ.12,750 பறிமுதல் செய்யப்பட்டது.