
சென்னை: செப். 23-
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அக்டோபர் முதல் வாரத்தில் தமிழகம் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2029 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ‘மாணவர் குரல்’ என்ற தலைப்பில் மாநிலம் தோறும் பயணம் மேற்கொண்டு, கல்லூரி மாணவ, மாணவியரை ராகுல் சந்தித்து வருகிறார். தமிழகத்தில் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியைப் பிரமாண்டமாக நடத்த, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டமிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், மாணிக்கம் தாகூர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ராகுலின் உதவியாளர் பைஜு மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், அக்டோபர் முதல் வாரத்தில் ராகுலை தமிழகம் அழைத்து வந்து, மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது.










