Home மாவட்டங்கள் சென்னை அமைச்சர் கீர்த்தனாவின் நகை குறித்து விமர்சனம்

அமைச்சர் கீர்த்தனாவின் நகை குறித்து விமர்சனம்

சென்னை, அக். 27-
அமைச்சர் கீர்த்தனா அண்மையில் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை வழிபட்டார். திருமலையில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அவர் வந்தபோது அணிந்திருந்த நகைகள் குறித்தும், தேர்தல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நகை அளவு குறித்தும் திமுகவினர் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர்.
சிலர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர். இந்தப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. திமுக ஆதரவாளர் அரவிந்த் ராஜா வெளியிட்ட பதிவில், “தங்க மயிலாக ஜொலிக்கும் நம்ம விருதை மகள், தேர்தல் நேரத்தில் கொடுத்த அபிடேவிட்டில் வெறும் 24 கிராம் தங்கம், அதாவது 3 பவுன் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் அணிந்துள்ள காசுமாலை மட்டும் 10 பவுன் தேறும்” என்று விமர்சித்திருந்தார். இதற்கு தவெக நிர்வாகிகள் பலர் பதிலளித்து வருகின்றனர். தங்கத்துக்கும் பேஷன் நகைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என அவர்கள் கடுமையாக விமர்சித்தனர். தவெக நிர்வாகி பிரியா வெளியிட்ட பதிவில், “இவர்கள் கவரிங் நகைகளைத் தங்க நகை என்று கூறி, மற்றவர்களை விமர்சிக்கின்றனர். அந்த நகைக்கடையின் காணொலியையும் வெளியிட்டுள்ளனர். ஒரு பெண் தனது உழைப்பால் அமைச்சராக இருந்து மக்களுக்காகப் பணியாற்றி வருகிறார்.