Home விளையாட்டு தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

வெலிங்டன், அக். 27–- இந்​தியா – நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான 3-வது டி20 கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் உள்ள ஹென்றி மைதானத்​தில் இன்று பகல் 12.30 மணிக்கு நடை​பெறுகிறது. இரு அணிகள் இடை​யி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் கிறைஸ்ட்​சர்ச்​சில் நடை​பெற்ற முதல் 2 ஆட்டங்​களில் இந்​திய அணி தலா 2 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது. இத​னால் தொடரில் இந்​திய அணி 2-0 என முன்​னிலை வகிக்​கிறது. இந்​நிலை​யில் 3-வது ஆட்​டம் வெலிங்​டனில் உள்ள ஹென்றி மைதானத்​தில் இன்று பகல் 12.30 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெறும் பட்​சத்​தில் இந்​திய அணி தொடரை கைப்​பற்​றும். முதல் 2 போட்​டிகளி​லும் ரன்​கள் வேட்​டை​யாடப்​பட்டு இருந்​தன. 2-வது போட்​டி​யில் 181 ரன்​களை இந்​திய அணி துரத்​திய நிலை​யில் திலக் வர்மா, நமன் திர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடி அணிக்கு வெற்றி தேடிக்​கொடுத்​தனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். டாப் ஆர்​டரில் சஞ்சு சாம்​சன், அபிஷேக் சர்மா ஆகியோர் மீண்​டும் மட்​டையை சுழற்​று​வதில் கூடுதல் கவனம் செலுத்​தக்​கூடும். கடந்த ஆட்​டத்​தில் வைபவ் சூர்​ய​வன்ஷி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்​படுத்​திக் கொள்​ளத் தவறினார். இத​னால் வைபவ் சூர்​ய​வன்ஷி இம்​முறை வாய்ப்பை பயன்​படுத்​திக் கொள்​வதில் தீவிரம் காட்​டக்​கூடும். பேட்​டிங் வலு​வாக இருக்​கும் நிலை​யில் பந்து வீச்சு நிலைத்​தன்​மையுடன் இல்​லாதது சற்று பின்​னடைவாக பார்க்​கப்​படு​கிறது. புவனேஷ்​வர் குமார், அர்​ஷ்​தீப் சிங் ஆகியோர் நியூஸிலாந்​தின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்​கடி அளிக்​கக்​கூடும். மிட்​செல் சாண்ட்​னர் தலை​மையி​லான நியூஸிலாந்து அணி சொந்த மண்​ணில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்​டிய நிலைக்கு தள்​ளப்பட்​டுள்​ளது. டாப் ஆர்​டர் பேட்​ஸ்​மேன்​கள் இது​வரை பெரிய அளவில் ரன்​கள் குவிக்​க​வில்லை. அதேவேளை​யில் மிடில் ஆர்​டரில் கிளென் பிலிப்ஸ் இரு ஆட்​டங்​களி​லும் அரை சதம் அடித்து அணியை சரி​வில் இருந்து மீட்டு இருந்​தார்.