Home மாவட்டங்கள் சென்னை ஆவின் 67 பொருட்களின் விலை உயர்வு

ஆவின் 67 பொருட்களின் விலை உயர்வு

சென்னை, அக். 28-
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஆவின் நிறுவனத்தின் நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட 67 பால் உபபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட விலைகள் அமலுக்கு வருவதால், பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூலப்பொருட்களின் விலை, கொள்முதல் செலவு மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிய பட்டியலின்படி, ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.780, 500 மில்லி ரூ.400, 200 மில்லி ரூ.180, 100 மில்லி ரூ.95 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அட்டைப்பெட்டி நெய் ஒரு லிட்டர் ரூ.770 ஆகவும், 500 கிராம் வெண்ணெய் ரூ.320 மற்றும் ரூ.325 ஆகவும், 100 கிராம் வெண்ணெய் ரூ.70 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தீபாவளி இனிப்புகளில் 250 கிராம் குலோப் ஜாமுன் ரூ.115, 200 கிராம் ரசகுல்லா ரூ.95, 250 கிராம் பால்கோவா ரூ.150, மைசூர்பா ரூ.160, நெய் அல்வா ரூ.125, நட்ஸ் அல்வா ரூ.200, நெய் பாதுஷா ரூ.205 என விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 500 மில்லி தயிர் ரூ.40, ஒரு கிலோ சாதாரண தயிர் ரூ.70, மோர் 200 மில்லி ரூ.10, லஸ்ஸி ரூ.23, மில்க் ஷேக் ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.