
சென்னை, அக். 29-
சென்னை ரயில்வே கோட்டத்தில் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.618.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் சுமார் 5.413 மில்லியன் டன் எடையுள்ள அத்தியாவசியப் பொருட்கள், மின் உற்பத்திக்குத் தேவையான பொருட்கள் மற்றும் கனரகத் தொழில்துறை சரக்குகள் நாடு முழுவதும் வெற்றிகரமாகக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. அனல் மின் நிலையங்களின் எரிபொருள் தேவைக்காக 3.517 மில்லியன் டன் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.346.42 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது சென்னை ரயில்வே கோட்டத்தின் மொத்த சரக்கு வருவாயில் 56 சதவீதமாகும். ஹூண்டாய்,
ரெனால்ட் நிசான், ஓலா, டிவிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் மோட்டார் வாகனங்கள் மற்றும் தொழில்துறை உபகரணங்கள் 370 சரக்கு ரயில்கள் மூலம் கையாளப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக ரூ.122.64 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில் மோட்டார் வாகனங்கள் மூலம் மட்டும் ரூ.90.62 கோடி கிடைத்துள்ளது.














