Home மாவட்டங்கள் சென்னை சென்னை மீனவர்கள் 5 பேரின் உடல்கள் மீட்பு: குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம் அரசு நிதி

சென்னை மீனவர்கள் 5 பேரின் உடல்கள் மீட்பு: குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம் அரசு நிதி

சென்னை: நவ.6- ’முரசு’ புயலின்போது படகு கவிந்து விபத்துக்குள்ளானதில் காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான நிலையில்,ஆந்தி ராவில் 5 பேர் உடல் கரை ஒதுங்கியுள்ளது. மேலும், 4 மீனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கடந்த அக்.29-ம் தேதி, காசிமேட்டைச் சேர்ந்த செல்வழகன் என்பவருக்கு சொந்த மான விசைப்படகில் சூர்யா(49), தண்டையார் பேட்டையைச் சேர்ந்த குப்பன் (48), முருகன் (48), காசிமேட்டைச் சேர்ந்த மோகன் (47), அரவிந்தன் (40), திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேஷ் (52), விஜயகாந்த் (44), காசிபுரம் பி பிளாக்கைச் சேர்ந்த குப்புசாமி (58), கடலூரைச் சேர்ந்த நாராயணன் (57) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.ஆந்திர மாநில கடல் பகுதி யில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, முரசு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மீனவர்கள் தங்களது விசைப் படகைப் பாதுகாப்பாக ராமயபட்டினம் கடற்கரையில் நிறுத்தினர். பின்னர் மீண்டும் மீன்பிடிக்கச் சென்றபோது, படகின் இன்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கடந்த 3-ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் அருகில் இருந்த மற்றொரு விசைப்படகுக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்துள் ளனர். அதன்பிறகு 9 மீனவர்களை யும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து, கடலோரக் காவல் படையினர் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.இதற்கிடையே, பிரகாசம் மாவட்டம் கொத்தபட்டினம் அருகே கடற்கரையில் 5 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியதாகக் கூறப்பட்டது. மேலும், கடற்கரையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் மாயமான மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் கவிழ்ந்து கிடப்பதை கடலோரக் காவல் படையினர் கண்டறிந்துள்ளனர்.கரை ஒதுங்கிய உடல்களில் விஜயகாந்த், மோகன், முருகன் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆந்திர மாநிலத்துக்கு விரைந்துள்ளனர். எஞ்சிய 4 மீனவர்களைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வரு கிறது.