Home மாவட்டங்கள் சென்னை மூன்று நாட்களில் ரூ.375 கோடி வசூல்: ‘ராமாயணா’

மூன்று நாட்களில் ரூ.375 கோடி வசூல்: ‘ராமாயணா’

சென்னை, நவ. 8-
இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ராமாயணா’ திரைப்படம், வெளியான மூன்று நாட்களிலேயே உலகளவில் ரூ.375.50 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் மூன்றாவது நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த வசூல் படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இப்படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 5-ம் தேதி வெளியான இப்படம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் வேடத்தில் யாஷும், அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடித்துள்ளனர். ரவி துபே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். பிரமாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் பங்களிப்பு ஆகியவை படத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. மூன்றாவது நாளில் மட்டும் இப்படம் இந்திய அளவில் ரூ.69.80 கோடி நிகர வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் ரூ.218.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.157.25 கோடியும் வசூலித்துள்ளது. இதன் மூலம் உலகளவில் படத்தின் மொத்த வசூல் ரூ.375.50 கோடியாக உயர்ந்துள்ளது.