Home மாவட்டங்கள் சென்னை அன்பில் மகேஸ் ஜாமீன் மனு தள்ளுபடி

அன்பில் மகேஸ் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: நவ.11-
திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸின் ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்த சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்ற நீதிபதி, மாணவர்​கள் நலனே முக்​கியம் என்று கருத்து தெரி​வித்​துள்​ளார்.முந்​தைய திமுக ஆட்​சி​யில், தமிழகத்​தில் உள்ள தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் உள்​ளிட்ட அனுமதி​களை பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி 177 தனியார் பள்ளி நிர்​வாகி​களிடம் கட்சி நிதி என்ற பெயரில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து முறைகேட்​டில் ஈடு​பட்​டுள்​ள​தாக புகார் எழுந்​தது. இது​குறித்து சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் பி.டி.அரசகுமார், முன்​னாள் எம்​எல்ஏ முத்​துக்​குமார், முன்​னாள் பள்​ளிக் கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ், சரவணன், ராஜா, சுரேஷ், தினேஷ் உள்​ளிட்​டோர் மீது வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். இதில், பி.டி.அரசகுமார் ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டுள்​ளார்.இந்த வழக்​கில் கடந்த அக்​டோபர் 26-ம் தேதி கைது செய்​யப்​பட்ட முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ், நீதி​மன்ற காவலில் சிறை​யில் உள்​ளார். கடந்த அக்​டோபர் 29 அன்று நீதி​மன்​றத்​தில் சரணடைந்த முத்​துக்​குமார் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். சரவணன், தினேஷ் தவிர்த்து மற்​றவர்​கள் கைதாகி ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டுள்​ளனர்.இந்​நிலை​யில், அன்​பில் மகேஸூக்கு ஜாமீன் கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மனு மீதான விசா​ரணை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எல்.எஸ்.சத்​தி​யமூர்த்தி முன்​னிலை​யில் கடந்த 5-ம் தேதி நடந்​தது. அப்​போது அன்​பில் மகேஸ் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் அபுடுகுமார் ராஜரத்​தினம், வழக்​கறிஞர் ரிச்​சர்ட்​ஸன் வில்​சன் ஆகியோ​ரும், காவல் துறை தரப்​பில் மாநில அரசு தலைமை குற்​றவியல் வழக்​கறிஞர் ஆர்.ஜான் சத்​யன் மற்​றும் சிறப்பு அரசு குற்​றவியல் வழக்​கறிஞர் கே.உஷா ராணி ஆகியோ​ரும் ஆஜராகி வாதிட்​டனர். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி எல்.எஸ். சத்​தி​யமூர்த்தி தீர்ப்பை 10-ம் தேதிக்கு (நேற்று) தள்ளி வைத்தார்.இந்நிலையில், அன்​பில் மகேஸின் ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். நீதிபதி பிறப்​பித்​துள்ள விரிவான உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் உள்​ளிட்ட அனுமதி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி பி.டி.அரசகுமாரும், முத்​துகுமாரும் தனியார் பள்ளி நிர்​வாகி​களிடம் இருந்து கோடிக்​கணக்​கில் பெரும் தொகையை வசூலித்து, அதை கட்சி நிதி என்ற பெயரில் பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சராகப் பதவி வகித்த அன்​பில் மகேஸிடம் லஞ்​ச​மாக கொடுத்​துள்​ளனர் என குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.