
மாஸ்கோ: நவ. 11-
ரஷ்யாவின் புகழ்பெற்ற முன்னணி சுதந்திர நாளிதழான ‘நோவையா கஸேட்டா’, அரசு அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக மாஸ்கோவில் உள்ள தனது தலைமை அலுவலகத்தை மூடியுள்ளது.
2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, அந்நாட்டில் செயல்பட்டு வந்த கடைசி சுதந்திர ஊடகமும் தற்போது மூடப்பட்டுள்ளது.மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்களைத் துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்த ‘நோவையா கஸேட்டா’வின் 6 நிருபர்கள் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நாளிதழின் முன்னாள் முதன்மை ஆசிரியரான டிமிட்ரி முரடோவ், 2021-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். அரசு எதிர்ப்பு முத்திரை காரணமாக அவர் தனது பதவியை இழந்தார்.தற்போது, ‘நோவையா கஸேட்டா’வின் ஆன்லைன் தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், அதன் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாஸ்கோ அலுவலகத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் வெளியேறிய பின்னர், அந்த அலுவலக வளாகத்தில், ‘‘இங்கு நோவையா கஸேட்டா இயங்கியது’’ என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது















