Home மாவட்டங்கள் பெங்களூர் சிறையிலேயே நடிகர் தர்ஷனுக்கு பிசியோதெரபி சிகிச்சை தொடக்கம்

சிறையிலேயே நடிகர் தர்ஷனுக்கு பிசியோதெரபி சிகிச்சை தொடக்கம்

பெங்களூரு, நவ. 11-
ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்சனுக்கு மீண்டும் கடுமையான முதுகுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறையிலேயே அவருக்குப் பிசியோதெரபி சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு அவரது வழக்கறிஞர் ஹஷ்மத் பாஷா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த 59-வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம், சிறையிலேயே பிசியோதெரபி மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்க உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவின்படி, சஞ்சய் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் சிறைக்குச் சென்று தர்சனுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். முதுகுவலி குறையும் வரை 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை இந்த சிகிச்சையைத் தொடர மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.மேலும், தர்சனின் உடல்நிலை குறித்த விரிவான மருத்துவ அறிக்கையை நவம்பர் 12-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.