
லக்னோ: நவ. 13-
உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு (2027) நடைபெற உள்ளது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணியும் பிரதான போட்டியாளர்களாக உள்ளன. இந்நிலையில், மாநிலத்தில் 3-வது அணி உருவாகும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.இதையடுத்து, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்)
கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ஆசாத் சமாஜ் கட்சி (கான்ஷிராம்) தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் லக்னோவில் நேற்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது ஒவைசி கூறியதாவது:ஏஐஎம்ஐஎம் மற்றும் ஆசாத் சமாஜ் கட்சி (கான்ஷிராம்) இணைந்து ‘சமூக பரிவர்தன் மோர்ச்சா’ (எஸ்பிஎம்) என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தக் கூட்டணி உத்தர பிரதேசத்தின் 403 தொகுதிகளிலும் போட்டியிடும்.
எங்கள் சகோதரர் சந்திரசேகர் ஆசாத், எஸ்பிஎம் கூட்டணியின் தலைவராகவும், முதல்-வர் வேட்பாளராகவும் இருப்பார். பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதே இந்தக் கூட்டணியின் நோக்கம் என்று ஒவைசி தெரிவித்தார்.













