
இஸ்லாமாபாத், செப். 26- முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி அறிவித்துள்ளது. போராட்டக்காரர்கள் இஸ்லாமாபாத் செல்வதைத் தடுக்க அரசு விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், போராட்டம் செப்டம்பர் 27-க்கு பதிலாக அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறும் என PTI தலைவர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். கூடுதல் கால அவகாசம் அரசுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் என அவர்கள் கூறினர். ஊழல் தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டுள்ள இம்ரான் கான், 2023 முதல் சிறையில் உள்ளார். சிறையில் அவர் நடத்தப்படும் விதம் குறித்து PTI-யில் கவலை அதிகரித்துள்ள நிலையில் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்டத்துக்கு முன்னதாக PTI-யைச் சேர்ந்த பல தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது அவர்களுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் மூன்று சகோதரிகளும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையை எதிர்கொள்பவர்களில் கைபர் பக்துன்க்வா முதல்வர் சோஹைல் அஃப்ரிதியும் ஒருவர். PTI-யின் கோட்டையாகக் கருதப்படும் அந்த மாகாணத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமாபாத் செல்லக்கூடும்.
















