
மும்பை, செப். 28-
மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சரிவு நிலவியது. நாட்டின் பங்கு சந்தைகளில் வழக்கம்போல் வர்த்தகம் தொடங்கியபோதிலும், கடந்த 7 வாரங்களாக நீடித்து வரும் சரிவு நிலை இன்றும் தொடர்ந்தது. மும்பை பங்கு சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 934.10 புள்ளிகள், அதாவது 1.26 சதவீதம் சரிந்து 72,961 புள்ளிகளாக இருந்தது. சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெற்றுள்ள 30 பங்குகளும் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகிந்திரா வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, பஜாஜ் பின்செர்வ், இந்துஸ்தான் யுனிலீவர், மகிந்திரா அண்ட் மகிந்திரா, லார்சன் அண்ட் டியூப்ரோ மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்தன.















