Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரில் மரம் மீதுலாரி மோதி விபத்து

பெங்களூரில் மரம் மீதுலாரி மோதி விபத்து

பெங்களூரு: அக். 9-
பெங்களூரு க்ரசென்ட் சாலையில் கேன்டர் வாகனம் மோதியதில் பிரம்மாண்ட மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக, அருகில் இருந்த பெட்டிக் கடை, பாதசாரிகள் மற்றும் பைக் ஓட்டிகள் மீது மரம் விழாததால் நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தப்பியது.
க்ரசென்ட் ஹோட்டல் எதிரே இந்த சம்பவம் நடந்துள்ளது. ரஸ்தாவில் குறுக்காக மரம் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மரம் சாயத் தொடங்கியதும், கேன்டர் வாகனத்துடன் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகத் தெரிகிறது.
ரேஸ் கோர்ஸ் சாலை மூடப்பட்டிருந்ததால், கேன்டர் ஓட்டுநர் க்ரசென்ட் சாலை வழியாக வாகனத்தை ஓட்டி வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். சாலையில் குறுக்காக விழுந்த மரத்தை அகற்ற கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பின் ஊழியர்கள் விரைந்து வந்து, மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.