விபத்து – இளைஞர் பலி

பெங்களூர் : ஜனவரி 22. வேகமாக வந்த கார் புல்லெட் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயங்களால் இறந்துள்ள சம்பவம் கெங்கேரியின் மைலசந்திரா 8வது க்ராஸ் சந்திப்பு அருகில் நேற்று இரவு நடந்துள்ளது. மலத்தேஹள்ளியின் ஞானஜ்யோதி நகரில் வசித்து வந்த த்ருவா (32) இந்த விபத்தில் உயிரிழந்தவர். இவர் நேற்று இரவு 10.30 மணியளவில் தன் பணியை முடித்து கொண்டு புல்லெட் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வழியில் குளோபல் வில்லேஜ் பின்புற வாயில் வீதியில் மல்லச்சந்திரா 8வது க்ராஸ் அருகில் எதிரில் இருந்து வேகமாக வந்த கார் மோதியுள்ளது. இதனால் தடுமாறி கீழே விழுந்த இவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் இவரை உடனே பி ஜி எஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் இவர் இறந்து போயுள்ளார். தகவல் அறிந்த உடனேயே விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த கெங்கேரி போக்குவரத்து போலீசார் மேற்பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.