
சென்னை, நவ. 7-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், 1,276 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான ரூ.117 கோடியே 7 லட்சம் வங்கி நிதி இணைப்புகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மகளிர் சுய உதவிக் குழுவும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக உள்ளது. பெண்கள் பொருளாதார ரீதியாக மேம்பட வேண்டும். “நாங்கள் சம்பாதிக்க வேண்டும்” என்ற நோக்கத்தில் ஆட்சிக்கு வரவில்லை. அத்தகைய நோக்கம் இருந்தால் மக்கள் ஆட்சியாளர்களைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். இப்படித்தான் 2026 தேர்தலில் முந்தைய அரசை மக்கள் தூக்கி எறிந்தனர். இந்த ஆட்சியைக் கலைத்து விடுவோம் என்று சிலர் கூறி வருகின்றனர். அவ்வாறு ஆட்சியைக் கலைத்தால், அடுத்த நாளே பெண்கள் புரட்சி வெடிக்கும். தவெக தலைவர் விஜய் அனைவருடைய இல்லத்திலும் இருக்கிறார். இந்த ஆட்சியை உருவாக்கியவர்கள் பெண்கள்தான். விஜய்யின் தைரியத்துக்கும் வெற்றிக்கும் பெண்களே காரணம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.













