Home மாவட்டங்கள் பெங்களூர் ஆயுதங்களுடன் புகுந்த 6 பேர் கும்பல் வெறியாட்டம் – 8 பேர் படுகாயம்

ஆயுதங்களுடன் புகுந்த 6 பேர் கும்பல் வெறியாட்டம் – 8 பேர் படுகாயம்

பெங்களூரு: செப். 21-
பெங்களூரு உத்தாரஹள்ளி பகுதியில் உள்ள அரஹள்ளி கேட் அருகே, பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, வீதியில் சென்ற பொதுமக்கள் மீது திடீரென வெறித்தனமான தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியுள்ளது.மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த அந்த 6 பேர் கொண்ட கும்பல், கையில் லாங், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்துக்கொண்டு, கடை வாசலில் நின்றிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் வழியில் சென்ற பொதுமக்கள் உட்பட சுமார் 8 பேர் பலத்த காயமடைந்தனர். தாக்குதலை நடத்திய பின் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.இந்த தாக்குதலில் மீன் கடை உரிமையாளர் பாலசுப்ரமணியம் மற்றும் ரவி உட்பட பலர் காயமடைந்தனர். குறிப்பாக ரவி என்பவரது காது மற்றும் கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.எந்தவித காரணமும் இன்றி, கண்ணில் பட்டவர்கள் மீது இந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சுப்ரமணியபுரா காவல் நிலைய போலீசார், நள்ளிரவில் சம்பவ இடத்திற்கும் மருத்துவமனைக்கும் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
பொதுமக்களை அச்சுறுத்தி தப்பியோடிய அந்த மர்ம நபர்களை பிடிப்பதற்கு சுப்ரமணியபுரா போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர்.