
பெங்களூர்: செப். 22-
பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், ரூ.28 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா மற்றும் ரூ.1.75 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வியட்நாம், பாங்காக், அபுதாபி மற்றும் கோலாலம்பூரிலிருந்து லக்கேஜ் பைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட 80.11 கிலோ கஞ்சா மற்றும் 1.2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக 4 தனித்தனி வழக்குகளில் 6 பயணிகளைக் கைது செய்து போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













