Home மாவட்டங்கள் சென்னை இரு மொழி கல்வி – தமிழக அரசு உறுதி

இரு மொழி கல்வி – தமிழக அரசு உறுதி

சென்னை: செப். 19-
தமிழக அரசு இரு மொழி கல்வியில் கொள்கையில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறிய பிறகும் அதை ஏற்க தமிழக அரசு மறுத்துள்ளது. எந்த காரணத்தைக் கொண்டும் இந்திக்கு இடமில்லை இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம் என்ற கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
நவோதயா வித்யாலயா குடியிருப்புப் பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்க முடியாது என்ற நிலைப்பாட்டை தவெக அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்கள் இங்கே:-
நவோதயா பள்ளிகள் தொடர்பான வழக்கின் விசாரணையின் போது, “மாநிலங்கள் தனிநாடுகள் போல் செயல்பட முடியாது.
தமிழ்நாட்டு மண்ணில் இந்தி கற்பிக்கப்படாது என்ற நிலைப்பாட்டை எடுக்க முடியாது” என நீதிபதி நாகரத்னா அமர்வு கருத்து தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தவெக தலைவருமான ராஜ்மோகன் ஆறுமுகம், “நீதிபதியின் கருத்து ஒரு உத்தரவு அல்ல.நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் தமிழ் மண்ணில் தமிழளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்றார்.
நவோதயா பள்ளிகள் சர்ச்சையின் பின்னணியும் நிலப் பிரச்சினையும்
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவோதயா பள்ளிகள், கிராமப்புற மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்கும் நோக்கில் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன.
மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளைத் திறக்க முயன்றாலும், தங்களின் இருமொழிக் கொள்கைக்கு (தமிழ் – ஆங்கிலம்) மாறாக மும்மொழிக் கொள்கையை மறைமுகமாகத் திணிக்கும் திட்டங்களுக்கு நிலம் ஒதுக்க முடியாது எனத் தமிழக அரசு மறுத்து வருகிறது.
இதற்கிடையே, நிலம் கண்டறிய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் இந்தி திணிப்பு ஏற்க மாட்டோம் என்று ஏற்கனவே திராவிட கட்சிகள் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்தது போல் தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசும் அதே கொள்கையை பின்பற்றி இரு மொழி கல்விக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
தமிழக அரசு இரு மொழி கொள்கையில் உறுதியாக இருப்பதை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர் ஹிந்தியை ஏற்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறிய பிறகும் தமிழக அரசு திட்டவட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது