
பெங்களூர்: அக். 2-
பெங்களூரு தெற்கு மாநகராட்சிக்குட்பட்ட பொம்மனஹள்ளி மண்டலம், ஹரளூர் கிராமத்தில் ராஜகாலுவேக்கு சொந்தமான 6 குண்டா (சுமார் 6,534 சதுர அடி) ‘பி-கராப்’ நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவர்கள் மற்றும் ஷெட்டுகளை அதிகாரிகள் அதிரடியாக இடித்து தள்ளினர். சிறப்பு துணை ஆட்சியர் நீதிமன்ற உத்தரவின் பேரில், பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் ரூ.6 கோடி மதிப்பிலான பொது நிலம் மீட்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கே.என். ரமேஷ் தெரிவித்துள்ளார்.













