
பெங்களூரு, நவ. 5-
பப் நட்பை பயன்படுத்தி இளம்பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று கற்பழித்த காமுகனை மடிவாளா போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை விஷயமாக பெங்களூரு வந்துள்ளார். இவர் கோரமங்கலத்தில் உள்ள ஒரு பப்புக்கு சென்றபோது, அங்கிருந்த சமீர் என்பவரிடம் சிகரெட் பற்றவைக்க லைட்டர் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இளம்பெண்ணிடம் நைசாக பேசிய சமீர், அவரது செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு மடிவாளாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதைநம்பி அந்த இளம்பெண்ணும் மடிவாளாவில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
அங்கு இருவரும் அறையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது இளம்பெண்ணுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து போதையேற்றிய சமீர், அவர் மயக்க நிலையில் இருந்ததை பயன்படுத்தி கொடூரமாக கற்பழித்துள்ளார்.
இதையடுத்து அதிகாலையில் ஹோட்டலில் இருந்து வெளியேறிய இளம்பெண், நேராக மடிவாளா போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர வேட்டை நடத்தி குற்றவாளி சமீரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சமீரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்தனர்.













