Home செய்திகள் உலக செய்திகள் இஸ்ரேலுக்கான நிதியுதவி நிறுத்தம்: ட்ரம்ப் அறிவிப்பு

இஸ்ரேலுக்கான நிதியுதவி நிறுத்தம்: ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: நவ.4-
இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவியை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முற்றிலும் நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அளித்த பேட்டியில் ட்ரம்ப் கூறியதாவது: “இஸ்ரேலுக்கான நிதியுதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்துவது குறித்து அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசனை நடத்தி ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி வழங்கி உதவ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் தேவையான அமெரிக்க ராணுவத் தளவாடங்களை நேரடியாக விலைகொடுத்து வாங்கிக்கொள்ள முடியும். இருப்பினும், இஸ்ரேலுக்கு தேவை ஏற்படும் பட்சத்தில் உதவிகள் வழங்கப்படும்” என்றார்.இந்த நிதியுதவி விவகாரம் குடியரசுக் கட்சிக்கு எதிரான முக்கிய அரசியல் ஆயுதமாக ஜனநாயகக் கட்சியினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்