Home செய்திகள் தேசிய செய்திகள் ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு

ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு

ஜெய்ப்பூர்: நவ. 4-
ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில், இந்தியா–பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
எல்லைப் பகுதி என்பதால், பயங்கரவாத தடுப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். குண்டுவெடிப்பால் சேதமடைந்த தண்டவாளத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சம்பவம் ரயிலை கவிழ்ப்பதற்கான சதியா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், இந்தச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் யார் என்பதையும் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.