Home செய்திகள் தேசிய செய்திகள் எம்.பி.க்கள் போராட்டம்: மதிய உணவுக் கூட்டத்துக்கு கார்கே மீண்டும் அழைப்பு

எம்.பி.க்கள் போராட்டம்: மதிய உணவுக் கூட்டத்துக்கு கார்கே மீண்டும் அழைப்பு

புதுடெல்லி, அக். 8- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் வலுத்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் போராடிவரும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்றைய தினம் போல் இன்றும் மதிய உணவு கூட்டத்துக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டை முன்னின்று நடத்தும் காங்கிரஸ், அக்டோபர் 8-ஆம் தேதியை ‘கருப்பு தினம்’ என அனுசரிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 7 தேதியிட்ட கடிதத்தில், “அக்டோபர் 8 அன்று மாநில, மாவட்ட மற்றும் வட்ட அளவில் பெரிய அளவிலான போராட்டங்களை ஏற்பாடு செய்யுங்கள்,” என காங்கிரஸ் அமைப்புகளை பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வலியுறுத்தியிருந்தார். மேலும், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறை தவறாக நடத்தியதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. இதற்காக, அக்டோபர் 8 அன்று தங்கள் மாநிலங்களில் ’கருப்பு தினம்’ அனுசரித்து போராட்டங்களை நடத்துமாறு காங்கிரஸ் தனது மாநிலப் பிரிவுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையில், அக்கட்சியின் தலைவர் கார்கே, எதிர்க்கட்சி எம்பிக்களை இன்றும் மதிய உணவு கூட்டத்துக்கு கார்கே மீண்டும் அழைத்துள்ளார். கன்னாட் பிளேஸில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வருமாறு அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.