Home மாவட்டங்கள் பெங்களூர் கார் டயர் வெடித்து மாணவர்கள் 3 பேர் பலி

கார் டயர் வெடித்து மாணவர்கள் 3 பேர் பலி

செங்கல்பட்டு: ஆக. 29-
ங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, கார் டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேர் புதுச்சேரி சென்றுவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, காரின் பின்புற டயர் திடீரென வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 3 மாணவர்கள் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வை்க்கப்பட்டுள்ளன.