Home மாவட்டங்கள் கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் கொள்ளைத் திட்டம் தீட்டிய 4 பேர் கைது

கிருஷ்ணகிரியில் கொள்ளைத் திட்டம் தீட்டிய 4 பேர் கைது

கிருஷ்ணகிரி, அக். 31-
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நகர போலீசார், கருப்பு உடையில் தூங்கிக் கொண்டிருந்த 4 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் முகமூடி, கிளவுஸ், மயக்க மருந்து, சிரிஞ்ச், லேசர் விளக்கு, பூச்சிக்கொல்லி மருந்து, ஆசிட் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், ஓசூரிலிருந்து போச்சம்பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், போச்சம்பள்ளி செல்லும் வழியில் புதிய பஸ் நிலையத்தில் கருப்பு உடையில் படுத்திருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து 4 பேரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்கள், ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே உள்ள கொரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிங்காரவேலன், போச்சம்பள்ளி அருகே மலையாண்டஅள்ளியைச் சேர்ந்த கல்கி, இளம்பருதி, விமல் என்பது தெரியவந்தது.