Home மாவட்டங்கள் பெங்களூர் கோர விபத்து 2 என்ஜினீயரிங் மாணவர்கள் பலி

கோர விபத்து 2 என்ஜினீயரிங் மாணவர்கள் பலி

பெங்களூர், செப்.19 ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கில் ஜாலி ரைடு சென்ற இரண்டு என்ஜினீயரிங் மாணவர்கள், கடையில் பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் இன்று அதிகாலை எலஹங்கா – ராஜானுகுன்டே சாலையில் நடந்துள்ளது. சிக்கமகளூரைச் சேர்ந்த வசன், பிரதீப் ஆகியோரே உயிரிழந்த மாணவர்கள் ஆவர். ராஜானுகுன்டே பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்த வசன், நிட்டே என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டும், பிரதீப் பிரசிடென்சி கல்லூரியில் முதலாம் ஆண்டும் படித்து வந்தனர். இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் இருவரும் புல்லட் பைக்கில் ஜாலி ரைடு சென்றுள்ளனர். அப்போது, ராஜானுகுன்டே சாலையில் உள்ள ஒரு கடையின் சுவர் மீது பைக் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இருவருமே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த எலஹங்கா போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.