
சென்னை, அக். 28-
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் சாம்பார் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று, ரகத்தைப் பொறுத்து ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. மொத்த விலையிலேயே அதிகரிப்பு காணப்படுவதால், வெளிச்சந்தை மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் சாம்பார் வெங்காயத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. அங்கு ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயத்தின் இந்தத் திடீர் விலை உயர்வு இல்லத்தரசிகளையும் உணவக உரிமையாளர்களையும் பெரும் சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது.














