
சென்னை, நவ. 2-
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,200-க்கும், ஒரு கிராம் ரூ.12,775-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், வார இறுதியில் அதிரடியாகக் குறைந்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.2,480-ம், கிராமுக்கு ரூ.310-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.















