Home செய்திகள் தேசிய செய்திகள் டெல்லி கூட்டத்தில் நடந்தது என்ன?

டெல்லி கூட்டத்தில் நடந்தது என்ன?

புதுடெல்லி: நவ. 2-
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்​பில் டெல்​லி​யில் நேற்று பேரணி மற்​றும் கண்​டன பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது.
தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்​டியா கூட்​டணி சார்​பில் நவம்​பர் 1-ம் தேதி டெல்லி​யில் பேரணி நடை​பெறும் என்று அறி​விக்​கப்​பட்​டது. இதன்​படி நேற்று மதி​யம் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் திறந்த வேனில் கன்​னாட்​பிளேஸில் இருந்து பேரணி​யாக புறப்​பட்​டனர். பின்​னர் ராம்​லீலா மைதானத்​தில் கண்​டன பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது.
இதில் காங்​கிரஸ் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா, சமாஜ்வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்​கிரஸ் தலை​வர் மம்தா, ராஷ்டி​ரிய ஜனதா தள மூத்த தலை​வர் தேஜஸ்வி யாதவ், கர்​நாடக முதல்​வர் சிவகுமார், தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி, இமாச்​சல பிரதேச முதல்வர் சுக்​விந்​தர் சிங், ஜார்க்​கண்ட் முதல்​வர் ஹேமந்த் சோரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். பல்​வேறு மாநிலங்​களில் இருந்து ஆயிரக்​கணக்​கான தொண்​டர்​கள் ராம்​லீலா மைதானத்​தில் குவிந்தனர்.
கூட்​டத்​தில் காங்​கிரஸ் தலை​வர் கார்கே பேசும்​போது, “பிரதமர் நரேந்​திர மோடி, தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை பாது​காக்க முயற்சி செய்​கிறார். ஆனால் ஞானேஷ் குமார் பதுங்கு குழி​யில் இருந்​தா​லும் இந்​திய இளைஞர்​கள் அவரை கண்​டு​பி​டிப்​பார்​கள். பிரதமர் நரேந்​திர மோடி​யின் ஆட்சியை அகற்ற வேண்​டும். வாக்கு திருட்டை தடுத்து ஜனநாயகத்​தைக் காப்​பற்ற வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.
சமாஜ்வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் பேசும்​போது, “உத்​தரபிரதேச சட்​டப்​பேரவைத் தேர்​தலில் இரட்டை இன்​ஜின் அரசு, இரட்டை தோல்​வியை சந்​திக்​கும். தேர்​தல் ஆணை​யத்தை பயன்படுத்தி உத்​தர பிரதேசத்​தில் வெற்றி பெறலாம் என்று பாஜக கனவு காண்​கிறது. அந்த கனவு பலிக்​காது” என்​றார். திரிணமூல் காங்​கிரஸ் தலை​வர் மம்தா பானர்ஜி பேசும்​போது, “மேற்​கு​வங்க தேர்​தலில் நாங்​கள் தோற்​க​வில்லை, தோற்​கடிக்​கப்​பட்​டோம். ஞானேஷ் குமார் மேற்​கு​வங்​கத்​தில் வாக்​குத் திருட்​டில் ஈடுபட்டார். அவர் உடனடி​யாக பதவி விலக வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.