Home விளையாட்டு செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு வெள்ளி

செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு வெள்ளி

சாமர்கண்ட்: செப். 28-
உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்டில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
போட்டியை நடத்திய உஸ்பெகிஸ்தான், ஓபன் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. கடைசி சுற்றில் இந்திய அணி, ஹங்கேரியுடன் 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. இதன் மூலம் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.மகளிர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய அணி, ஜார்ஜியாவுடன் 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. இதையடுத்து இந்திய அணி 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.