
டோக்கியோ: செப். 20- ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், இதுவரை இந்தியாவுக்கு இரண்டு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டு (செப்.19 – அக்.4) நடக்கிறது. 45 நாடுகளை சேர்ந்த 11,000 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 35 போட்டியில் 501 பேர் (267 வீரர், 234 வீராங்கனைகள்) சாதிக்க உள்ளனர். இதற்கான துவக்க விழா நகோயாவில் உள்ள மிசுஹா பார்க் அத்லெட்டிக் மைதானத்தில் நடந்தது.
2 மணி நேரம் நடந்த நிகழ்ச்சிகளை 30,000 ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். போட்டியை ஜப்பான் மன்னர் நருஹிட்டோ முறைப்படி துவக்கி வைத்தார். அணிவகுப்பில், இந்திய மூவர்ணக்கொடியை மனு பாகர், பவன் ஷெராவத் ஏந்தி வந்தனர்.
தற்போது இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவை சேர்ந்த இளவேனில் வாலறிவன், விதர்ஷா வினோத் மற்றும் சோனம் மஸ்கர் அடங்கிய மூவர் மகளிர் அணியினர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினர்.
இன்னொரு வெள்ளிஅதேபோல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர், ஏற்கனவே குழு போட்டியில் மற்ற இருவருடன் இணைந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இது இந்தியாவுக்கு இரண்டாவது வெள்ளிப்பதக்கம் ஆகும்.













