
சென்னை, நவ. 26-
தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஒரு பவுனுக்கு ரூ.960 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும், ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 10-ம் தேதி முதல் தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் ஒரு பவுன் விலை ரூ.1 லட்சத்துக்குக் கீழ் இறங்கியது.
தொடர்ந்து சரிந்த தங்கம் விலை, கடந்த 21-ம் தேதி ரூ.92 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. மேலும் குறைந்து ரூ.90 ஆயிரத்துக்குக் கீழ் வந்துவிடும் எனக் கூறப்பட்ட நிலையில், கடந்த 23-ம் தேதி நிலைமை மாறியது. அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,080 உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.920 அதிகரித்தது.
இதனால் 23, 24-ம் தேதிகளில் மட்டும் ஒரு பவுனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்வு ஏற்பட்டது. தங்கம் விலை மீண்டும் குறையுமா அல்லது தொடர்ந்து உயருமா என்ற குழப்பம் சந்தையில் நிலவியது. இந்த நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.295-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 360-ம் குறைந்தது. இதையடுத்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 420-க்கும், ஒரு பவுன் ரூ.91 ஆயிரத்து 360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 23, 24-ம் தேதிகளில் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்திருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.2,360 குறைந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.120-ம், பவுனுக்கு ரூ.960-ம் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும், ஒரு பவுன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.














